திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இந்திரா, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலையால் உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திரா, சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே, இவர் குடும்பத்தை கவனிக்க சென்னமநாயக்கன்பட்டிக்கும், ஊராட்சி நிர்வாகத்தைக் கவனிக்க சத்திரப்பட்டிக்கும் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் மன உளைச்சல் காரணமாக, இந்திரா தான் குடியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர் இந்திராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து குடும்பத் தகராறு காரணமாக ஊராட்சி மன்றத் தலைவி தற்கொலை செய்துகொண்டரா? அல்லது கொலை செய்துகொண்டரா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்திரப்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார், இந்திரா தம்பதியினர் சென்னமநாயக்கன்பட்டியில் தங்களது இருமகன்களுடன் வாடகை வீட்டில் வசித்தனர். வீட்டிற்கு அருகில் தென்னை மட்டை நார் கம்பெனி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மிரட்டும் தனியார் நிதி நிறுவனர்: தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவி!