ETV Bharat / state

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நீர் திறப்பு - Palani Dam

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு அணை நீரை திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 14, 2023, 7:17 PM IST

பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணை என்பது திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணை 65அடி கொள்ளளவு கொண்டதாகும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

இதன் காரணமாக விவசாய தேவைக்கு அணையில் தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபுற பிரதான கால்வாயில் இருந்து தினமும் விநாடிக்கு 70 கனஅடி நீர் வீதம் 110 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். இதன்மூலம் மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9600 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், ஆட்சியர் விசாகன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தாய்லாந்து டூ சென்னை: அபாயகரமான உயிரினங்கள் கடத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.