திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணியின் முக்கிய நிகழ்வாக பால தண்டாயுதபாணி சிலை அமைந்ததிருக்கும் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5:30 மணிக்கு மலைக்கோயில் சன்னதி திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், 5:40 மணிக்கு பூஜையும், 6:10 மணிக்கு சிறு காலசாந்தி பூஜையும், 6:20 மணிக்கு காலசாந்தி பூஜையும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, அஷ்டபந்தன மருந்து சாத்துவதற்காக காலை 6:30 மணி முதல் கோயிலில் உள்ள சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, காலை 9:45 மணிமுதல் 10:30 மணிவரை மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் காலை 6:30 மணிமுதல் காலை 10:30 மணிவரை நான்கு மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனம்செய்வது நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர் காலை 10:30 மணிக்கு மேல் வழக்கம்போல், பக்தர்கள் சாமி தரிசனம்செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையர், ஊழியர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: