திண்டுக்கல்: தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் சேலம் மாவட்டம், மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
இதில் வயதின் அடிப்படையில், எடை பிரிவுகளின்கீழ் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. 15 வயதிற்குப்பட்டவர்கள் பிரிவில் 42 கிலோ எடைப்பிரிவில் மணிகண்டன், 38 கிலோ எடைப்பிரிவில் ஹரிஹரன், 46 கிலோ எடைப்பிரிவில் ரோகினி, 38 கிலோ எடைப்பிரிவில் நத்தீஸ்வரி,
66 கிலோ எடைப்பிரிவில் மாணவி சங்கீதா, 17 வயதிற்குப்பட்ட 45 கிலோ எடைப்பிரிவில் மாணவர் மணிகண்டன், 46 கிலோ எடைப்பிரிவில் ரோகினி, 41 கிலோ எடைப்பிரிவில் நித்தீஸ்வரி, 73 கிலோ எடைப்பிரிவில் சந்தியா ஆகிய 9 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். நான்கு பேர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தீரா காம்பாட் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் அசாருதீன், ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.
இதையும் படிங்க: நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தி தமிழ்நாடு சிறுவன் அசத்தல்!