ETV Bharat / state

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் - முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.

கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள் துவக்கம்

author img

By

Published : Jan 24, 2023, 9:33 AM IST

பழனி முருகன் கோயில்

திண்டுக்கல்: பழனி முருகன் மலைக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கோயில் பிரதானமாக விளங்குகிறது. இந்த மலைக்கோயிலில் உள்ள பழனியாண்டவரை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.

தமிழ்நாட்டின் முதன்மை கோயிலாக விளங்கும் பழனியில் போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி நடைபெற்றது. வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் முடியும்வரை மூலவரை தரிசிக்க முடியாது. எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் முதல்கால யாகபூஜை நேற்று (ஜனவரி 24) கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் தொடங்கியது‌‌.

மலைக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, தெய்வ விக்ரகங்களின் சக்தியை, புனிதநீர் அடங்கிய புனித கலசங்களில் உருஏற்றி யாகசாலைகளில் வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வேதமந்திரங்களும், தமிழ்மறைகளும் ஓத யாகங்கள் நடத்தப்படுகிறது.

வரும் 27ஆம் தேதி அதிகாலை வரை எட்டு கால வேள்வி பூஜைகள் தொடங்கி நிறைவுறுகிறது. 26ஆம் தேதி மலைக்கோயில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோயிலுக்கு 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Palani kumbabishekam; தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் - மாநில அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.