ETV Bharat / state

பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.5.71 கோடி! - This is the first time that the bill of over Rs 5 crore has been collected

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கடந்த 25 நாட்களில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமாக உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.

Palani Murugan Temple
Palani Murugan Temple
author img

By

Published : Jan 10, 2020, 9:07 AM IST

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் கடந்த 25 நாட்களாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இதில் ரொக்கமாக இரண்டு கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 520 ரூபாயும், தங்கமாக 670 கிராமும், 12,300 கிராம் வெள்ளியும், 545 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளது

இரண்டாம் நாளாக எண்ணப்பட்ட உண்டியலில் கூடுதலாக மூன்று கோடியே 16 லட்சத்து 370 ரூபாயும், 220 கிராம் தங்கமும், 3260 கிராம் வெள்ளியும் வெள்ளி 3260 கிடைத்தது.
ஆக, பழனி முருகன் கோயிலுக்கு கடந்த 25 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ஐந்து கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 890 ரூபாய் ரொக்கமாக வழங்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி தங்கம் 890 கிராமாகவும், வெள்ளி 15560 கிராமும் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலில் ஐந்து கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை கிடைக்கபெற்றது இதுவே முதல் முறை.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் பழனி கோயில் இணைஆணையர் ஜெயசந்திரபானுரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.
பழனி முருகன் கோயில்

கோயில் உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

கார்த்திகை மாதம் பழனி முருகன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கூடுதல் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: 'அசல் மரகத லிங்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்' - திருத்தொண்டர் படைத் தலைவர் கோரிக்கை

Intro:திண்டுக்கல் 09.01.2020

பழனி முருகன் கோயில் உண்டியலில் கடந்த 25 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் 2.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது.Body:திண்டுக்கல் 09.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

பழனி முருகன் கோயில் உண்டியலில் கடந்த 25 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் 2.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்திவிட்டு செல்கின்றனர். கடந்த 25 நாட்களாக பழனி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலைமிதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது. அதில் ரொக்கமாக 2,57,41,520 ரூபாயும், தங்கம் 670 கிராம், வெள்ளி 12,300 கிராம், 545 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக எண்ணப்பட்ட உண்டியலில் கூடுதலாக ரொக்கம் 3,16,00,370 ரூபாயும் தங்கம் 220 கிராம் வெள்ளி 3260 கிராம் வெளிநாட்டு கரன்சி 393 எண்ணிக்கையுமாக கிடைக்கப்பெற்று மொத்தமாக ரொக்கம் 5,73,41,890 ரூபாயாகவும் தங்கம் 890 கிராமாகவும் வெள்ளி 15560 கிராமாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது ரூபாய் 5 கோடிக்குமேல் உண்டியல் வசூல் கிடைக்கபெற்றது இதுவே முதல் முறையானது என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோயில் இணைஆணையர் ஜெயசந்திரபானுரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஈடுபட்டனர். கார்த்திகை மாதம் துவங்கியதிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.Conclusion:திண்டுக்கல் 09.01.2020
பழனி முருகன் கோயில் உண்டியலில் கடந்த 25 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் 2.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.