Palani Kumbabhishekam:திண்டுக்கல் அருகே பழனிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும்போது கோவில் வளாகம் ராஜகோபுரத்திற்கு மலர்த்தூவ முடிவுசெய்யப்பட்டு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து இன்று(ஜன.26) வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரானது பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான அருள் பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது திருக்கோவில் தங்க விமானம் மற்றும் ராஜ கோபுரத்தை சுற்றிலும் மலர்த் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது தெரிந்து உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் ஹெலிகாப்டரை காண குவிந்தனர். இதனையடுத்து ஹெலிகாப்டரை பொதுமக்கள் நெருங்காத வகையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சர்வதேச எல்லையில் இந்தியா - பாக் வீரர்கள் குடியரசு தின கொண்டாட்டம்...