ETV Bharat / state

முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் - மீனவர்கள் குற்றச்சாட்டு! - dindugul district news

பழனி பகுதியில் உள்ள குளங்களில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் வளர்க்கப்படும் மீன்களைப் பிடிப்பதில்‌, மீனவர் சங்க நிர்வாகிகள் சிலருடன் அலுவலர்கள் இணைந்து முறைகேடு செய்வதாக மீனவர் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் குற்றச்சாட்டு!
மீனவர்கள் குற்றச்சாட்டு!
author img

By

Published : Jun 13, 2021, 8:33 AM IST

திண்டுக்கல் : மீன்களைப் பிடிப்பதில் மீனவர்களை அனுமதிக்காமல் அலுவலர்களே லட்சக்கணக்கான ரூபாய்‌ முறைகேடு செய்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் உள்ள மந்தைக்குளம், பெரிய அய்யம்புள்ளி குளம், ஜோசியர் குளம், பாப்பான்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட சில குளங்களில் அரசும், மீனவர்களும் இணைந்து மீன்கள் வளர்த்து, அதில் வரும் வருமானத்தை அரசும், மீனவர்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது.

இதனடிப்படையில் பாலசமுத்திரத்தில் உள்ள மந்தைக்குளத்தில் உள்ள மீன்கள் தற்போது பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதில் மீனவர்களை அனுமதிக்காமல், அலுவலர்களே லட்சக்கணக்கான ரூபாய்‌ முறைகேடு செய்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'கடந்த டிசம்பர் மாதம் மந்தைக்குளத்தில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்டப் பலவகைகளில் சுமார் நான்கு லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. அவை தற்போது நன்கு வளர்ந்துள்ள நிலையில் மீனவர்களுக்கு அறிவிக்காமல், மீன் பிடிக்கப்படுகிறது. மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சிலருடன் இணைந்து மீன்வளர்ச்சிக் கழக இணை இயக்குநர், ஆய்வாளர் ஆகியோரும் இணைந்து மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் மீன் குஞ்சுகள்‌ அனைத்தும் அரசு செலவில் விடப்படவில்லை. அலுவலர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து மீன்களை வளர்த்தோம். இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எனவே, மீனவர்கள் ஒவ்வொருவரும் 20ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே மீன்கள் பிடிக்க அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால், ஒவ்வொரு மீனவருக்கும் தலா இரண்டு ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு விலகிக்கொள்ளுமாறும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, வறுமையில் வாடும் மீனவர்களுக்கு அலுவலர்கள் கேட்கும் பணத்தினைக் கொடுக்க இயலாமல், பலரும் ஒதுங்கிக் கொண்டனர். எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரு சில மீனவர்களையும் மீனவர் சங்கத்தில் இருந்து விலக்கிவிடுவோம் என்று அலுவலர்கள் மிரட்டுகின்றனர்.

பாலசமுத்திரம் மந்தைக்குளத்தில் சுமார் 20 டன் மீன்கள் உள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி சுமார் 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

மீனவர்கள் குற்றச்சாட்டு

ஆனால், அரசுக்கு மிகமிக குறைவாக வருவாய் வந்ததாக காட்டிவிட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்படுகிறது.

எனவே அரசுக்கும் இல்லாமல், மீனவர்களுக்கும் இல்லாமல் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியாருக்குச் சொந்தமான குவாரியில் அலுவலர்கள் ஆய்வு: வாகனங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.