ETV Bharat / state

டீசல் விலை ... வாடகை வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி...

டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது வாடகை வாகன ஓட்டுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பழனியில் டீசல் விலை இவ்வளவா
பழனியில் டீசல் விலை இவ்வளவா
author img

By

Published : Oct 18, 2021, 9:28 PM IST

திண்டுக்கல்: கடந்த சிலநாட்களாக பெட்ரோல்‌,டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல்,டீசல் விலையை‌ குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இருப்பினும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.‌இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி 100 ரூபாய் 12 பைசாவிற்கு விற்பனையாகிறது.

இந்த விலை ஏற்றம் வாடகை வாகன ஓட்டுனர்களிடையே பெரும்‌ அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது,

"டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடகை வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது கவலையாக உள்ளது.

இதனால் முன்னதாக பேசி வைத்திருக்கும் வாடகையில் நஷ்டம் ஏற்படும் என்றும், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில், பெட்ரோல் விலையை‌ மட்டும் குறைத்துள்ளது. எனவே, தற்போது டீசல் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'கருணாநிதி நினைவிடப் பணிகளில் தாமதம் கூடாது' - அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.