உலகையே உலுக்கிவரும் கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்ற வாசகங்களை காணொலியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகர் மற்றும் புறநகர் பிரதான சாலைகள், அரசு தலைமை மருத்துவமனை சாலை, திருச்சி-பழனி இணைப்பு சாலை, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட 15 இடங்களில் தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'ப்ளூ நிறமான குழந்தை'... பைக்கிலேயே பச்சிளம் குழந்தையை அழைத்து சென்ற மருத்துவர்!