திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாடில் மிகப் பெரியதாகும். அங்கிருந்து தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் முதல் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பேருந்து நிலையம் அருகாமையில் நகரின் மையப்பகுதியில் குறுகிய இடத்தில் அமைந்தள்ள இச்சந்தையில் சுகாதாரக்கேடு, அடிப்படை வசதிகள் இல்லை என அடுக்கடுக்காக புகார் எழுத்தது. இதையடுத்து, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 130 கடைகளுடன் போக்குவரத்து, கழிப்பிடம், குடிநீர், காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வசதி என பல்வேறு வசதிகளுடன் இச்சந்தை கட்டமைக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த உழவர் சந்தை திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, சந்தைத் திறக்க நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் ராஜா, ரிப்பன் வெட்டி உழவர் சந்தையை நேற்று திறந்துவைத்தார். அங்கு ஒப்பந்த வியாபாரிகள் கடைகளை திறந்து விளைப்பொருட்களை விற்பனைக்கு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் செயலர் சந்திரசேகர், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: கோயம்பேடு மார்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!