ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

திண்டுக்கல்: கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.

author img

By

Published : Jul 15, 2020, 5:21 PM IST

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற சந்தையாகும். இங்கு, தினந்தோறும் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். இங்கிருந்து சுமார் 80 விழுக்காடு காய்கறிகள் கேரள மாநிலத்திற்குத் தினந்தோறும் அனுப்பப்படுகிறது.

தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்த மார்க்கெட்டை மூன்று பகுதிகளாகப் பிரித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இதுவரை செயல்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தி காய்கனி மார்க்கெட்டில் கடை உரிமையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் மார்க்கெட்டிற்கு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று முன்தினம் (ஜூலை.13) மார்க்கெட்டில் பணியாளராக வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் இரண்டு பேருக்கு கரோனா உறுதியானது.

இதையடுத்து, நேற்று (ஜூலை.14) பழனி கோட்டாட்சியர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் தேவிகா ஆகியோர் முன்னிலையில் மார்க்கெட் கடை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், இன்று (ஜூலை 15) முதல் ஜூலை 21ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மார்க்கெட் முழுவதும் அடைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மூன்று பகுதிகளாக செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் காய்கறிகள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.