திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செல்லமுத்து-பாரதி. இவர்களது மகன் ஆதர்ஷ்ராஜா. 7ஆம் வகுப்பு படித்துவரும் ஆதர்ஷ்ராஜா மலையாள மொழித் திரைப்படமான M M M M M ( சவுண்ட் ஆஃப் பெய்ன்) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் விஜிஸ்மணி என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தேன் சேகரிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும் செல்போன் டவர்களால் தேனீக்கள் இனம் அழிந்து அவர்கள் தேன் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும்போது சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட மூன்று திரைப்படங்களில் முதல் திரைப்படமாக இது உள்ளது. ஆதர்ஷ்ராஜா நடித்த முதல் திரைப்படமே ஆஸ்கார் விருதுக்குச் சென்றுள்ளதால் பெற்றோரும், அப்பகுதி பொதுமக்களும் அவரை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.