திண்டுக்கல்: ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று உயர்நீதிமன்றத்தில் வெளியானது. இதில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஒபிஎஸ்-க்கு ஆதரவாக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன் மறைந்த முன்னாள் அதிமுக முதல் எம்.பி மாயத்தேவரின் மகன் செந்தில் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பேனரில் இடம்பெற்ற எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் கிழிக்கப்பட்டது.
தொடர்ந்து தர்மம் வென்றது, கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் வாழ்க என்ற கோஷங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக்கொலை...