திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள அய்யலூரில் தினமும் தக்காளி சந்தை நடைபெறும். அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள 15 கிராமங்களில் இருந்து தக்காளி இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள், விஷேங்கள் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் இம்மாதங்களில் காய்கறிகள் விலை அதிகரித்தே காணப்படும். எனவே இதனை நம்பி விவசாயிகள் தக்காளி விவசாயத்தை பெருமளவில் சாகுபடி செய்தனர். ஆனால், இந்த வருடம் கரோனா நோய் தொற்று காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. எனவே தக்காளி மகசூல் அதிகரித்து, சந்தைக்கு வரத்தும் அதிகரித்ததால் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விலை குறைவாக விற்றும் தக்காளி பழத்தை அடுத்த நாள் வைத்திருந்து விற்பனை செய்ய முடியாததால் வியாபாரிகளும் அளவாகவே வாங்கிச் செல்கின்றனர். இதனால் பல டன் தக்காளி தேக்கம் அடைவதால் மீதமிருக்கும் தக்காளிகளை சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டிவிட்டி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி மனு!