ETV Bharat / state

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை - ஒட்டன்சத்திரம் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்! - Oddanchatram market seven days closed

திண்டுக்கல்: கரோனா தொற்று பரவல் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இன்று (ஜூலை 15) முதல் ஜூலை 21ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மூடப்படுகிறது.

vegetable
vegetable
author img

By

Published : Jul 15, 2020, 2:19 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய பிரபலமான காய்கறி சந்தைகளுள் ஒன்றாகும். இங்கு காந்தி காய்கறி சந்தை மற்றும் காமராஜர் காய்கறி சந்தை, தற்காலிக சந்தைகள் என நான்கு இடங்களில் காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி காய்கறி சந்தையில், கடை உரிமையாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அந்தக் கடைக்கு மட்டும் சீல் வைத்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, நேற்று முன்தினம் (ஜூலை 13) திடீரென மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி காய்கறி சந்தைகளில் ஆய்வுமேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், காய்கறி சந்தை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இனி ஒரு நபருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானாலும் சந்தைகள் மூடப்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 14) காந்தி காய்கறி சந்தையில் தொழிலாளி மற்றும் கடை உரிமையாளர் என இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

எனவே மூன்று நபர்களுக்கு தொற்று உறுதியானதால் மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக, இன்று (ஜூலை 15) முதல் ஒரு வார காலத்திற்கு காய்கறி சந்தைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, பழனி கோட்டாட்சியர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில், காய்கறி சந்தை சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் தாமாக முன்வந்து இன்று முதல் வரும் ஜூலை 21ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு காய்கறி சந்தைகளை மூட முடிவெடுத்தனர்.

மேலும், விடுமுறை நாட்களில் சந்தை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மறைமுகமாக காய்கறி விற்பனையோ, இறக்குமதி ஏற்றுமதி செய்தாலோ காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் சங்க உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஏழு நாட்களும் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'மார்க்கெட்டுகள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக துணை முதலமைச்சர் உறுதி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.