ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் சந்தையில் விலை உயர்ந்துள்ள கால்நடைகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கால்நடை வாரச்சந்தையில் கால்நடைகள் விலை உயர்ந்துள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author img

By

Published : Jan 13, 2020, 10:51 PM IST

market
market

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாமல் குறைந்த விலைக்கு விற்றுவந்தனர்.

தற்போது பெய்த தொடர்மழை காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனங்களும், பச்சை பில் போன்றவை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக கால்நடைகளை விலைக்கு வாங்குகின்றனர்.

அதன்படி, இன்று நடைபெற்ற சந்தையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி, பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பனூத்து, அப்பிய பாளையம், தாமரைக்குளம், தாசநாயக்கன்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் கால்நடை மருத்துவ உதவி இயக்குனர்கள் டாக்டர் மணிவாசகன், சுரேஷ் தலைமையில் 200 கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் வாரச்சந்தை

அதேபோல் பயனாளிகளுக்கு போக்குவரத்து செலவாக ஒவ்வொரு கறவை பால் மாடுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதனால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள், இன்று விலை உயர்ந்து ரூ.35 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது.

நாட்டு பசு மாடுகள் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - களைகட்டிய சமத்துவ பொங்கல்

Intro:திண்டுக்கல் 13.01.2020
ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கால்நடைகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Body:திண்டுக்கல் 13.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கால்நடைகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும் வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாமல் குறைந்த விலைக்கு விற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழை காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனங்களும் பச்சை பில் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக கால்நடைகளை விலைக்கு வாங்குவதும் தங்களுடைய கால்நடைகளை தொடர்ந்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி மற்றும் பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளுக்கான அப்பனூத்து, அப்பிய பாளையம், தாமரைக்குளம், தாசநாயக்கன்பட்டி ஆகிய நான்கு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் கால்நடை மருத்துவ உதவி இயக்குனர்கள் டாக்டர் மணிவாசகன் மற்றும் சுரேஸ் தலைமையில் 200 கறவைமாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் பயனாளிகளுக்கு போக்குவரத்து செலவாக ஒவ்வொரு கறவை பால் மாடுகளுக்கும் தலா ரூ 2500 வழங்கப்பட்டது இதனால் ரூ 20,000 முதல் 25,000 ஆயிரம் வரை விலை போன கறவை மாடுகள் இன்று விலை உயர்ந்து 35,000 வரை விலை போனது. அதேபோல் வளர்ப்பு கன்றுக்குட்டிகள் 5,000 முதல் 7,000 வரை விலை போனது. இன்று விலை உயர்ந்து 10 ஆயிரம் வரை விலை போனது அதேபோல் வளர்ப்பு நாட்டு பசு மாடுகள் 40 முதல் 50 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது விலை உயர்ந்து 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை விவசாயிகளும் பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் திருமால்அழகர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கேசவன், காலைவாணன், ரகுபதி, தனப்பிரியா, செந்தில், சுரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விலை உயர்வால் ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.Conclusion:திண்டுக்கல் 13.01.2020

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கால்நடைகள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.