திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒட்டன்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, "ஒட்டன்சத்திரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, அதிமுக ஆட்சியின் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் செய்யப்படும் அனைத்துத் திட்டங்களையும் திமுகதான் கொண்டு வந்ததாக தொகுதி மக்களிடம் பொய் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். உள்ளாட்சியில் வெற்றிபெற அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களை தாங்கள் செய்ததாக திமுக பொய் பரப்புரை மேற்கொண்டு குறுக்கு வழியில் வெற்றி பெற பார்க்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், "மீண்டும் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது திமுகவினர் எப்படி அரசு திட்டங்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பர். எனவே அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயனடைய அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: