தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கினால் வாகன ஓட்டுனநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சாலையோர கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கட்ட நிவாரணம் வழங்கிய நிலையில் இன்று (ஜூன் 9) கலையரங்கம் பகுதியில் சுமார் 500 பேருக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வினோத் செய்திருந்தார். பொதுமக்களும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி நிவாரண பொருள்களை வாங்கிச் சென்றனர்.