ETV Bharat / state

கேட் கீப்பர் இல்லை... கிராசிங்கில் கேட்டை மூட இறங்கிய ரயில் ஓட்டுநர்!

திண்டுக்கல்: வாயில் காப்பாளர் இல்லாததால் ரயில்வே கிராசிங்கில் ரயில் ஓட்டுநர் இறங்கி, அடைக்கும் வாயிலை சங்கிலி மூலம் மூடிவிட்டு சென்ற அவலம் திண்டுக்கல்லில் ஏற்பட்டுள்ளது.

கிராசிங்கில் கேட்டை ரயில் ஓட்டுநர் மூடும் காட்சி

author img

By

Published : Jun 2, 2020, 8:56 PM IST

திண்டுக்கல் அருகேயுள்ள ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் போன்றப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் திண்டுக்கல் கொண்டுவருவார்கள். அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்குப் பொருட்கள் வாங்குவதற்கு, தினமும் இப்பகுதிக்கு நூற்றுக்கணக்கானோர், இங்குள்ள ரயில்வே பாதையைக் கடந்து செல்லவேண்டும்.

இந்நிலையில் திண்டுக்கல் வழியாக பழனிக்கு சரக்கு ரயில் ஒன்று சென்றது. அப்போது பொதுப்பாதையை அடைக்கும் வாயில் காப்பாளர் இல்லாததால், ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநர் பொதுமக்கள் இருபுறமும் இருப்பதைப் பார்த்து, முன்கூட்டியே ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி, ரயில்வே பாதையை அடைக்கும் வாயிலில் இருந்த சங்கிலியை இருபுறமும் மாற்றிவிட்டு, பொதுமக்களிடம் ரயில் சென்றவுடன், நீங்கள் செல்லலாம் எனக்கூறிவிட்டு, ரயிலை ஓட்டிச் சென்றார்.

அதிக மக்கள் செல்லும் இதுபோன்ற ரயில்வே பாதைகளில் வாயில் காப்பாளர் இல்லாததும், சரக்கு ரயில் ஓட்டுநர் முன்கூட்டியே பொதுமக்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, ரயிலை நிறுத்தி சங்கிலியைப் போட்டுவிட்டுச் சென்றதும் மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆகையால், உடனடியாக ரயில்வே துறை இப்பகுதிக்கு வாயில் காப்பாளரை நியமிக்க வேண்டும். மேலும் தற்போது சரக்கு ரயில் மட்டுமே சென்று வந்த நிலையில் மீண்டும் பல்வேறு ரயில்கள் இப்பாதையில் செல்ல உள்ளன. வாயில் காப்பாளர் இல்லாமல் இருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.