திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பட்டிகுளம். அந்தக் குளம் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. பருவ மழைக் காலங்களில் அதில் தேங்கும் தண்ணீர் அதைச்சுற்றியுள்ள கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி பொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் ஐம்பது ஹெக்டெரில் விவசாய நிலங்களுக்கு பாசன நீராகா பயன்படும்.
அதுமட்டுமல்லாமல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 போர்களிலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுவருகிறது. இந்த நிலையில் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்த காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறிவருகின்றது.
அதனால் அதனை அகற்றிவிட்டு புதிய ஷட்டர்கள் அமைத்து தரும்படி அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் ஒதுக்கீடு செய்து குளத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை, விவசாயிகள் மகிழ்ச்சி!