திண்டுக்கல்: இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று (செப்.12) ஒரே கட்டமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் 459 மாணவர்களில் 423 பேரும், நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 மையங்களில் 1,920 மாணவர்களில் 1,857 பேரும் என மொத்தம் 2,280 பேர் தேர்வு எழுதினர்.
99 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளின் தோடு, செயின், கொலுசு, துப்பட்டா, மூக்குத்தி, தலைமுடியில் அணியக்கூடிய கிளிப் ஆகியவற்றை கழற்றிய பின்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாணவர்கள் அரைக்கை சட்டை செருப்புடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதி