திண்டுக்கல்: இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்தவர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வேடசந்தூர் அடுத்த சேடபட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே வேடசந்தூர் அருகே காக்காதோப்பு கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயத்துடன் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கவனக்குறைவாக சென்றதே விபத்திற்கான காரணம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு வழிச்சாலையை கடக்கும்போது கவனமாக நிறுத்தி நிதானமாகச் செல்லவேண்டிவது முக்கியம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டை எழுதித் தரக் கேட்டு மனைவி குடும்பத்தார் மிரட்டல்: மின்வேலை செய்பவர் தற்கொலை