திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கொண்டையம்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு பேரூராட்சி சார்பாக ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லாததால், திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இருந்த ஒரு கழிவறையையும் தண்ணீர் பற்றாக்குறையால் பேரூராட்சி நிர்வாகம் மூடியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினருடன் சேர்ந்து நத்தம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுத்து தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.