திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில் சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றதையடுத்து, சிறுமி வெளியில் விளையாடிவந்துள்ளார். இவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தோட்டத்தின் அருகே சிறுமி சென்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
'போக்சோ சட்டத்தில் கைது செய்க’
சிறுமியின் சந்தேகத்திற்கிடமான இறப்புக்கு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
மேலும் உடற்கூறாய்வின்போது காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கைவைத்தனர். இதனிடையே திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
மேலும் சிறுமியின் இறப்பிற்கு நீதி கிடைக்க கண்டிப்பாக திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல் துறையினரிடம் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து வந்த திருவாரூர் நபருக்கு கொரோனா வைரஸ்...?