ETV Bharat / state

பழனியில் கரோனாவுக்காக அலகு குத்திய நபர் - corona news

உலக மக்கள் அனைவரும் கரோனா அச்சத்தில் இருந்து விடுபட வேண்டி முருகபக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி காரை இழுத்தவாறே நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பழனியில் கரோனாவுக்காக அலகு குத்திய நபர்
பழனியில் கரோனாவுக்காக அலகு குத்திய நபர்
author img

By

Published : Sep 14, 2021, 3:06 PM IST

திண்டுக்கல்: ஈரோடு மாவட்டம் அத்தன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண(75). விவசாயியான இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது தனது முதுகில் அலகு குத்தி ஆம்னி வேனை கயிற்றால் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது, உலகெங்கும் கரோனா அச்சுறுத்தலால் மக்கள் அல்லல்படுவதில் இருந்து விடுபட்டு உலக மக்கள் நலன் வேண்டி இந்த நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என்றார்.

முதுகில் அலகு குத்தி அதில் கயிற்றைக்கட்டி ஆம்னி வேனை இழுத்தபடியே காவடியும் சுமந்தபடி கிரிவலம் வந்து வழிபட்டு, மொட்டை அடித்து நேர்த்திக்கடன்‌ செலுத்தினார். 75வயது முதியவர் ஒருவர் அலகு குத்தி வேனை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.