திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை திண்டுக்கல் எம்.பி. ப. வேலுச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் நத்தம் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் எம்.பி. ப. வேலுச்சாமி தெரிவித்ததாவது, "நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் கன்னியாபுரம், கொசவபட்டி, நத்தம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.
தேவையான நிதி ஆதாரங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேட்டுள்ளேன். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி தேர்தல் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வருவது உறுதி" என்று கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தேர்தல் பணி’ - ஆதிதிராவிடர் நலக்குழு