ETV Bharat / state

அன்னை தெரசா மகளிர் பல்கலை. சம்பளம் தரவில்லையென தர்ணா! - mother teresa university university workers

திண்டுக்கல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் பணியாளர்கள் நுழைவாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Mother Teresa Women's University workers

author img

By

Published : Oct 8, 2020, 3:54 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் 130-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகஸ்ட் மாத சம்பளம் தரவில்லை எனவும், ஒன்பது மாதங்களாகச் சம்பளம் வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது எனவும் கூறி நுழைவாயிலில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

முருகேசன் முன்னாள் ஊழியர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
மேலும் அவர்கள் தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்திற்குத் தேவையான நிதியினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
7 மாதங்களுக்குச் சம்பளம் தர இயலாது எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.