திண்டுக்கல்: கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதற்கு கலந்து கொள்ள வந்துள்ள மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒன்றிய அரசு 15 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.
ஒன்றிய அரசு வாங்கக்கூடிய செஸ் வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறினர். ஆனால் தற்போது 10 கோடிக்கும் அதிகமானோர் தங்களுடைய வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களை மத அடிப்படையில் பிரித்து மோதலை உண்டாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும் முயற்சியிலும் வருகின்ற 2024 ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை வைத்துக்கொண்டு தீவிரமான மத கலவரத்தை பாஜக அரசு உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
அரசியல்வாதிக்கு உண்டான தகுதிகள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிடையாது". பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தையும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவிலிருந்து தப்பியோடிய பண முதலைகளை பாஜக அரசு மீட்கவில்லை - முத்தரசன் குற்றச்சாட்டு!