திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமெச்சூர் ஆணழகன் சார்பாக 29ஆவது சீனியர் "மிஸ்டர் திண்டுக்கல்" ஆணழகன், பிட்னஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 உடற்பயிற்சி கூடத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 55, 60, 65, 70, 75, 80, 80 கிலோவுக்கும் மேல் ஆகிய ஏழு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் தங்களது உடற்கட்டுகளை காண்பித்து பலவிதமான முறையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரெண்ட் பைஃப் சாப்ஸ், அப் டாமல், சைட் செஸ்ட் போன்ற முறையில் போஸ்கள் செய்து காண்பித்தனர். இறுதியில் திண்டுக்கல்லின் ஆணழகனாக அர்ணால்டு ஜிம்மை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தம் 60 புள்ளிகள் பெற்று திண்டுக்கல் மஜிஸ் ஜிம் முதலிடமும், 45 புள்ளிகள் பெற்று திண்டுக்கல் அர்னால்டு ஜிம் இரண்டாம் இடம் பிடித்தது. போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 50, 000 ரூபாய் மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சரும் ரொக்க பரிசாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
அதேபோல் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு முறையே ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரியில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு