அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு பள்ளிக் கல்வித்துறை துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (ஏப்.14) இரவு சென்று தரிசித்தார்.
கோயில் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலைக்கோயில் சென்ற அவர், தொடர்ந்து வழிபாடு செய்தார்.
தொடர்ந்து அவருக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி வரவேற்பளித்து கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேகப் பொருள்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்மைச்சராக வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இதையும் படிங்க: கோயில் ராஜகோபுர கதவில் சிக்கி மூவர் காயம்