ETV Bharat / state

உயிரோடு இருக்கும் எம்பி-க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ! - condolences to the living MP

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக அமைச்சர் செல்லூர் ராஜூ உயிருடன் இருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய எம்பியுமான பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

minister-sellur-raju-expressed-condolences-to-the-living-mp

author img

By

Published : Sep 26, 2020, 4:41 PM IST

திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று (செப் 25) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, " முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரரும் தற்போது மாநிலங்களவை எம்பியாக இருந்துவந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அம்மாவிற்கு (மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா) மிகவும் பிரியமான நபர். அவரது அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.

அம்மா மீது பொய் சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டபோது எதிர்க்கட்சியில் இருந்தாலும் அதை எதிர்த்தவர்‌. அவருக்கு என் சார்பாகவும் வனத்துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைவரின் சார்பாகவும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக உயிருடன் உள்ள எம்பிக்கு இரங்கல் தெரிவித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இதையறிந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயிரிழந்தது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என எடுத்துரைத்ததையடுத்து சுதாரித்துக்கொண்ட செல்லூர் ராஜூ, நான் இறந்தது எதிர்க்கட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் என நினைத்துக் கொண்டேன். இருப்பினும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என சிறிதளவு சமாளித்தார்.

இதனிடையே, இறந்தவருக்கு பதிலாக உயிருடன் இருக்கும் நபருக்கு இரங்கல் தெரிவித்த சம்பவம் அங்கே சலசலப்பை ஏற்படுத்தியது.

உயிரோடு இருக்கும் எம்பி-க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.