ETV Bharat / state

ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ன செய்தாலும் உதயசூரியன் உதித்துக் கொண்டே இருக்கும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ன செய்தாலும் பயனில்லை உதயசூரியன் உதித்துக் கொண்டே தான் இருக்கும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

author img

By

Published : Feb 4, 2023, 8:21 PM IST

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்
ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ன செய்தாலும் பயனில்லை உதயசூரியன் உதித்துக் கொண்டே தான் இருக்கும்

திண்டுக்கல்: கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான 2 நாட்கள் பயிற்சி முகாமினை தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்துப் பேசினார். மாணவ மாணவிகள் கடின உழைப்புடன் கல்வி பயில வேண்டும் என்றார். மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துக் கலந்துரையாடல் செய்தார். முன்னதாக அட்டுவம்பட்டி பகுதியில் நடந்த தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "கான்பெடரேஷன் ஐடி அசோசியேசன் தொழில் முனைவோர் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த அமைப்பினர் சேவை மட்டும் செய்யாமல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும் இந்த வேண்டுகோளை மாநாட்டில் பேசினார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்படும் பிரச்னைகளை தொழில்நுட்பத் துறை மூலம் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத் துறையில் கட்டமைப்புகளை உருவாக்குவது, திறன் வளர்ப்பது உள்ளிட்ட பணிகளை இந்த துறை செய்து வருகிறது.

விவசாயம் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் உள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப துறை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை. 2030 ஆம் ஆண்டு 25 லட்சம் இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது. ஊரக பகுதிகளில் அனைத்து வகையான கல்லூரிகள் பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ன செய்தாலும் பயன் இல்லை. உதயசூரியன் உதித்துக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் நல்ல தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறந்த கொள்கை உடைய ஆட்சி நடைபெறுகிறது. உறுதியான தொண்டர்களைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் நம்பிக்கையுடன் இந்த ஆட்சி நடைபெறுகிறது. மாற்று சக்தி என்பது தமிழ்நாட்டில் இல்லை. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்காக நாங்கள் பணி செய்து வருகிறோம். இந்தியாவில் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை சனாதான கொள்கைகள் மூலம் ஒரு சக்தி, ஒரு கூட்டம் சதி செய்து வருகிறது.

இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. சமுதாய ஒற்றுமையை சனாதான கொள்கை சிதறடிக்க முயற்சி செய்து வருகிறது. திராவிட மாடல் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் எந்த நிலையில் இதை பேசுகிறார் என்று நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சனாதான கொள்கை சமுதாய ஒற்றுமைக்கு எதிரானது நம்ப வைத்து ஏமாற்றி வருகின்றார்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'அந்த மனசு தான் சார் கடவுள்' பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நலனுக்கு ரூ.5 கோடி நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.