ETV Bharat / state

'விலைவாசியைக் கட்டுக்குள் அரசு வைத்துக்கொள்ளும்' : அமைச்சர் ஐ.பெரியசாமி - திண்டுக்கல் அரசு மருத்துவமனை

திண்டுக்கல்: அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை உயர்த்தவிடாமல், தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைத்திருக்கும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

I PERIYASAMY, ஐ பெரியசாமி, MINISTER I PERIYASAMY
விலைவாசியை கட்டுக்குள் அரசு வைத்துக்கொள்ளும்
author img

By

Published : May 24, 2021, 6:52 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் நடமாடும் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோவிந்தாபுரம் பகுதியில் இன்று (மே 24) தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, "கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை அடங்கிய வாகனம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், ஒவ்வொரு தெருக்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்யும் விதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 234 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் செயல்படும்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

இந்த ஊரடங்கினை சாதகமாகப் பயன்படுத்தி காய்கனிகளை பதுக்கி வைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் மொத்த வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, தற்பொழுது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ளன. வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் விஜயலட்சுமி, மாநகராட்சி நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.