திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 4 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் என்றார்.
18 எம்எல்ஏக்களின் வாழ்க்கையை கெடுத்தது டிடிவி தினகரன் மட்டுமல்ல ஸ்டாலினும்தான் என்றும் இருவரில் ஒருவர் முதலமைச்சராகவும், மற்றொருவர் துணை முதலமைச்சராகவும் திட்டம் தீட்டினர் எனவும் அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியோ, எடப்பாடி ஆட்சியோ நடைபெறவில்லை, பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது என்று ஸ்டாலின் கூறி வருவது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சீன அதிபர் சென்னைக்கு வருவதை யொட்டி பிரதமருக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிலிருந்து அவரும் தங்களுடன் தான் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களை மிருகங்களிடம் இருந்தும், மிருகங்களிடம் இருந்து மக்களையும் காக்கின்ற பணியை வனத்துறை சிறப்பாக பணி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
‘திமுக ரவுடிசம் எங்கள் கட்சியில் இல்லை’ - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு