திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல பகுதிகளில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகள், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், நகரின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தேவை உள்ளது என்பதை அறிந்து தொய்வின்றி குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.