ETV Bharat / state

நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்‌! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா
நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா
author img

By

Published : Feb 25, 2020, 12:47 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம் பூஜை, மேளதாளம், மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் வண்ண மலர்களாலும் நாணல்புல், மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.

நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10ஆம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறும். 11ஆம் தேதி பூப்பல்லக்கு விழா நடைபெறும். இந்த விழாவில் செயல் அலுவலர் பாலசரவணன், திருக்கோயில் பூசாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.