ETV Bharat / state

'ஓட்டு போடலன்னா வெட்டுவேன்' - மக்களை மிரட்டும் மன்சூர் அலிகான்! - மன்சூர் அலிகான்

திண்டுக்கல் : "ஓட்டு போடவில்லை என்றால் ஒரே போடாக போட்டு விடுவேன்" என்று மக்களிடம் வித்தியாசமான முறையில் பரப்புரை செய்து திண்டுக்கல் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் மக்களை கவர்ந்து வருகிறார்.

மன்சூர் அலிகான்
author img

By

Published : Mar 25, 2019, 8:51 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார். தேர்தல் களத்தில் போட்டியிடுபவர்கள் வித்தியாசமான முறையில் வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரப்புரை செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.

மன்சூர் அலிகான்

அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகானின் பரப்புரை, திண்டுக்கல் தொகுதி மக்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்து பல்வேறு விதமான பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை துப்புரவு பணியாளர்களோடு இணைந்து சாலையில் உள்ள குப்பைகளை பெருக்கி சுத்தப்படுத்தினார்.

அப்போது, சாலைப் பணியாளர்களிடம் நகைச்சுவையாக பேசி பணிபுரிந்த மன்சூர் அலிகான். அங்கு இருந்தவர்களிடம் 'ஓட்டு போடாவிட்டால் ஒரே போடாக போட்டு விடுவேன்' என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து இளநீர் கடையில் இளநீரை வெட்டும் கத்தியை லாகவமாக மேலே தூக்கி எறிந்து பிடித்து சாகசம் செய்தபடி விற்பனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும், நடிகர் மன்சூர் அலிகானிடம் செல்பி எடுக்க வந்தவர்களிடம் 'போட்டோ எடுத்தால் மட்டும் போதாது ஓட்டு போட வேண்டும்' எனக்கூறி வித்தியாசமான முறையில் பரப்புரை செய்ததை கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

ஓட்டு போடவில்லை என்றால் ஒரே போடாக போட்டு விடுவேன் நடிகர் மன்சூர் அலிகான் நூதனமான தேர்தல் பிரச்சாரம்.

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார்.

தேர்தல் களத்தில் போட்டியிடுபவர்கள் வித்தியாசமான முறையில்  வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சாரம் முறைகளில் மக்களை கவர்வார்கள் . அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகானின் பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்கள் மத்தியில வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்து பல்வேறு விதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை துப்புரவு பணியாளர்களோடு இணைந்து சாலையில் உள்ள குப்பைகளை பெருக்கி சுத்தப்படுத்தினார். சாலைப் பணியாளர்களிடம் நகைச்சுவையாக பேசி பணிபுரிந்த மன்சூரலிகான் அங்கு இருந்தவர்களிடம் ஓட்டு போடாவிட்டால் ஒரே போடாக போட்டு விடுவேன் என்று நகைச்சுவையாக பேசினார்

இதனைத் தொடர்ந்து இளநீர் விற்பனை  கடையில் இளநீரை விற்பனை செய்தும் இளநீரை வெட்ட கத்தியை லாகவமாக மேலே தூக்கி எறிந்து பிடித்து இளநீரை வெட்டி விற்பனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் நடிகர் மன்சூர் அலிகான் அருகில் செல்பி எடுக்க வந்தவர்களிடம் போட்டோ எடுத்தால் மட்டும் போதாது ஓட்டு போட வேண்டும் என்று கூறி வித்தியாசமான பிரச்சார முறைகளை கையாண்டதை கூடியிருந்த மக்கள் ரசித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.