ETV Bharat / state

சொத்து தகராறு: முதியவரை அடித்துக் கொன்ற உறவினர்கள் - undefined

உறவினர்கள் அனைவரும் வந்தபொழுது கொலை செய்த அனைவரும் அவர்களது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதனால் வீட்டின் முன்பாக கைகலப்பு ஏற்பட்டது.

சொத்து தகராறு காரணமாக அப்பாவை அடித்துக் கொன்ற மகன்

author img

By

Published : Jul 10, 2021, 10:28 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக முதியவரை அவரது மகனும் மருமகளும் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அணைபட்டியில் நிலத் தகராறு காரணமாக ஆறுமுகம், அவரது தம்பி சண்முகம், மூத்த மகன் பொண்ணுவேல், மருமகள் சரோஜா, பொண்ணுவேலின் மைத்துனர் மணிகண்டன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆத்திரமடைந்த பொண்ணுவேல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து உருட்டு கட்டையால் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கினர்.

இதனைப் பார்த்த ஆறுமுகத்தின் தம்பி சண்முகம், தன் அண்ணனை அடிக்காதீர்கள் என்று தடுத்துள்ளார். ஆனால், அவர்கள் அவரையும் தாக்க முற்பட்டபோது தப்பித்து ஓடியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்த பொழுது, ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார். இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்துள்ளார்.

உறவினர்கள் அனைவரும் வந்தபொழுது கொலை செய்த அனைவரும் அவர்களது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதனால் வீட்டின் முன்பாக கைகலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, கொலை செய்ததாக கூறப்படும் உறவினர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.