திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கோரிக்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் பகவதி மகன் விஜயபிரபு. இவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி அதன்பின் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது சிறுமியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளதாக கூறி மிரட்டியுள்ளார். இதனைப் பயன்படுத்தி சிறுமியிடம் மீண்டும் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியிடம் பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018ஆம் ஆண்டு விஜயபிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விஜயபிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து விஜயபிரபு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை...!
திண்டுக்கல்: பழனி அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.