ETV Bharat / state

தாயைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனநலம் பாதித்த மகன் கைது!

திண்டுக்கல்: தாயைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜெயா
author img

By

Published : Nov 7, 2019, 9:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு ஜெயா என்ற மனைவியும் பாஸ்கர், கண்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கொலையாளி கண்ணன்
கொலையாளி கண்ணன்

இதில் கண்ணன் கடந்த மூன்று வருடங்களாக மனநிலைப் பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மருத்துவமனையில் இருந்து கண்ணன் தப்பித்து வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் இருந்த கண்ணனுக்கும், தாய் ஜெயாவுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் இருந்த சுத்தியலை எடுத்த ஜெயாவை பலமாக தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயா கொலை செய்யப்பட்ட வீடு

பின்னர் கண்ணனைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகனே தாயைக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரூர் அருகே தாய் இறந்த விரக்தியில் மகன் தற்கொலை!

Intro:திண்டுக்கல் 7.11.19

தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை போலீசார் கைது செய்து விசாரணை.

Body:திண்டுக்கல் அடுத்துள்ளது அட்சராஜக்காபட்டி இக்கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஜெயா நாகராஜ். இவர்களுக்கு பாஸ்கர் , கண்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கண்ணன் கடந்த மூன்று வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீபாவளிக்கு முன்பு கண்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார். தீபாவளி முடிந்த பின்னும் கண்ணன் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனிடையே தந்தை நாகராஜ் மற்றும் அண்ணன் பாஸ்கர் ஆகியோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தாய் ஜெயா மற்றும் கண்ணன் ஆகியோர் இருந்துள்ளனர். அப்பொழுது அம்மா-மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து அம்மாவின் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தாய் ஜெயா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.

மேலும் தாய் ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.