ETV Bharat / state

டிஎன்பிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி!

author img

By

Published : Jul 6, 2022, 9:02 PM IST

லைக்கா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்னர்ஸ் அணியை வென்றது. இந்த டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Lyca
Lyca

திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டு லீக் போட்டிகள், திண்டுக்கல் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கோபிநாத் 18 பந்துகளில் 41 ரன்களும், அஸ்வின் 32 பந்துகளில் 31 ரன்களும், பிரனவ்குமர் 34 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் சூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 147 ரன்கள் வெற்றி இலக்குடன் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடியது. அவ்வப்போது அதிரடி காட்டி ரன் எடுத்தனர். அந்த அணி 16.3 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணியில் அதிக பட்சமாக சுரேஷ்குமார் 43 பந்துகளில் 64 ரன்களும், சாய் சுதர்சன் 43 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் முருகன் அஸ்வின், கணேஷ் மூர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த போட்டியில் 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த லைக்கா கோவை கிங்ஸ் அணி வீரர் சுரேஷ்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த டிஎன்பிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி இன்று முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.