ETV Bharat / state

150 அடி கிணற்றுக்குள் விழுந்த சரக்கு லாரி- ஒருவர் உயிரிழப்பு - dindugal crime news

திண்டுக்கல்: ஆலந்தூரன்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

சரக்கு லாரி
சரக்கு லாரி
author img

By

Published : Aug 20, 2021, 12:21 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்திலிருந்து கன்னிவாடி நோக்கி பூமிராஜ் என்பவர் சரக்கு லாரி ஓட்டி சென்றார். அவருடன் வீரப்புடையான்பட்டியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் சென்றிருந்தார்.

இந்நிலையில் சரக்கு லாரி கன்னிவாடி அடுத்த ஆலந்தூரன்பட்டி நோக்கிச் சென்றபோது, ஓட்டுநர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததில், சாலை அருகே இருந்த 150 அடி ஆழ கிணற்றில் சரக்கு லாரி விழுந்தது. இதில் காளிதாஸ் கிணற்றுக்குள்ளே உயிரிழந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காவல் நிலையம், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் விழுந்த லாரி, உயிரிழந்த பூமிராஜ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.