ETV Bharat / state

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது!

திண்டுக்கல்: ஊரடங்கு உத்திரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது
மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது
author img

By

Published : Apr 3, 2020, 4:25 PM IST

கரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்கும் பொருட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் தவிர மதுபான கடை உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள முத்தனம்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது!

அப்போது சட்ட விரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த, சின்னக்கன்னு, கலியப்பெருமாள் ஆகிய இருவரையும் ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 142 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று அரசுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அச்சம்: ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.