ETV Bharat / state

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வழக்குரைஞர் ! - கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திண்டுக்கல்: கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு வழக்குரைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுப்பதால், தன்னை காப்பாற்றும் படி கதறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: காப்பாற்ற கதறும் பெண் !

author img

By

Published : May 11, 2020, 10:16 PM IST

Updated : May 11, 2020, 10:25 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சுப்புலட்சுமியும், அவரது கணவர் கணேசனும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடமதுரையில் உள்ள அம்பலகாரன்பட்டி கிராமத்தில் குடிபெயர்ந்தனர்.

அப்போது அவர்கள் இல்லம் அருகில் வசித்த ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அலுவலர் பழனிசாமி என்பவர் உறவினர் போல் பழகி உள்ளார். பின்பு பணியின் காரணமாக ஒட்டன்சத்திரத்துக்குக் குடிபெயர்ந்த சுப்புலட்சுமி, தான் இடம் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழனிசாமியிடம் கைமாறாக கொடுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவரிடம் சென்று, கைமாறாக கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார்.

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: காப்பாற்ற கதறும் பெண் !

ஆனால் பணத்தை பழனிசாமி திருப்பித் தர மறுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்துள்ளார். மீண்டும் பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பித் தர மறுத்த பழனிசாமி, குடும்பத்துடன் வந்து சுப்புலட்சுமியை மிரட்டி சென்றுள்ளார்.

இது குறித்து கடந்த 7ஆம் தேதி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். இதனிடையே பழனிச்சாமி வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் பாண்டியன் (எ) பாண்டியராஜன் மூலமாக சுப்புலட்சுமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தனக்கு இந்த உலகில் நியாயம் கிடைக்க போவதில்லை, தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு இல்லை. எனவே, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக, வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க...டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் தமிழ்நாடு வந்தடைவர் - அமைச்சர் கோபால் ராய்

Last Updated : May 11, 2020, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.