ETV Bharat / state

பெண் காவலர்களுக்கு மடிக்கணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கல் - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக 'தோழி' திட்டத்தின்கீழ் பெண் காவலர்களுக்கு 24 மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

இருசக்கர வாகனங்கள் வழங்கல்
இருசக்கர வாகனங்கள் வழங்கல்
author img

By

Published : Jul 31, 2021, 6:17 PM IST

Updated : Jul 31, 2021, 6:45 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் காவல் துறையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது, அதனைத் கையாளுவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக ‘தோழி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் வீடுகளுக்கே சென்று பேசி நம்பிக்கையை விதைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்நிலையில் ’தோழி’ திட்டத்தின்கீழ் 24 மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இன்று (ஜூலை 31) பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.

பெண் காவலர்களுக்கு மடிக்கணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கல் தொடர்பான காணோலி

நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் பெண் காவலர்களுக்கான பாலியல் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பும் தொடங்கிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ’சட்டக் கண்ணாடி மூலம் பாலியல் குற்றங்களைக் காண வேண்டும்’

Last Updated : Jul 31, 2021, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.