ETV Bharat / state

கொடைக்கானலில் மழை காரணமாக மண்சரிவு! - heavy rain in kodaikanal

திண்டுக்க‌ல்: கொடைக்கானலில் இர‌வு முழுவ‌தும் பெய்த கன‌மழையால் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ம‌ண்ச‌ரிவு ஏற்ப‌ட்டுள்ள‌து.

landslide in kodaikanal
author img

By

Published : Oct 17, 2019, 4:47 PM IST

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்போது தொட‌ர்ந்து சில நாட்க‌ளாக‌ க‌ன‌ ம‌ழை பெய்து வ‌ந்த‌து. நேற்று இரவு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக‌ தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதி - கொடைக்கானல்

இதனால் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையான செண்பகனூர் அருகே மூன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிகப்படியான மழை கொடைக்கானலில் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Intro:திண்டுக்கல் 17.10.19

கொடைக்கானலில் இர‌வு முழுவ‌தும் வெளுத்து வாங்கிய‌ கன‌மழையால் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ம‌ண்ச‌ரிவு ஏற்ப‌ட்டுள்ள‌து.

Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் நேற்றுபகலில் தொடங்கிய பலத்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. விடியவிடியகொட்டித்தீர்த்த மழையின்காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளதுடன் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொட‌ர்ந்து க‌ட‌ந்த‌ சில நாட்க‌ளாக‌ அவ்வ‌போது ப‌க‌லில் க‌ன‌ ம‌ழையும் பெய்து வ‌ந்த‌து. இரவு சுமார் 4மணிநேரத்திற்கும் மேலாக‌ தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால்
கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையானசெண்பகனூர் அருகே மூன்றிற்கும் மேற்பட்டஇடங்களில் லேசான மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிகப்படியான மழை கொடைக்கானலில் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் மேல்மலைப்பகுதிகளில் 10.3 செமீ மழையும், கொடைக்கானல் நகர் நடுமலைப்பகுதிகளில் 9.6 செமீ மழையும், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் 2.1 செமீ மழையும் பதிவாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.