ETV Bharat / state

நாட்டாமை மீது நிலம் அபகரிப்பு புகார் - மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி - மாற்றுத்திறனாளி தீ குளிக்க முயற்சி

திண்டுக்கல்: தங்களது நிலத்தை அபகரித்துள்ளதாக கூறி மாற்றுத்திறனாளி ஒருவர் தாய் மற்றும் உறவினர்களுடன் தீ குளிக்க முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலம் அபகரிப்பு
நிலம் அபகரிப்பு
author img

By

Published : Oct 15, 2020, 4:18 AM IST

திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் வைல்ட் ராஜா (50). மாற்றுத்திறனாளியான இவரும், அவரது தாய் விசுவாசம்மாள் (78), உறவினர்கள் மங்களமேரி (56), ரஞ்சிதம் (60), ஞானம்மாள் (50) ஆகியோரும் நேற்று (அக்.14) கோட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.

அதன்பின் அவர்கள் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

இதுகுறித்து வைல்ட் ராஜா, "திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து யாகப்பன்பட்டியில் எங்களுக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி நாங்கள் வசித்து வந்தோம்.

எனது ஊர் நாட்டாமை சேசு, அவரது தம்பி கென்னடி ஆகியோர் எங்கள் நிலத்தை அவர்களுடையது எனக் கூறி வீட்டை காலி செய்யக்கோரி மிரட்டினர். இதுகுறித்து ஒரு மாதத்திற்கு முன் கோட்டாட்சியர் அலவலகத்தில் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படி இருக்கையில் தற்போது எனது வீட்டை அவர்கள் இடித்து விட்டனர். வாழ வழியில்லாமல் தெருவில் நிற்கின்றோம். எங்களை மிரட்டி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தந்தை தீ குளிக்க முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.