திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமரன் என்பவர் கூலி வேலைக்காக பெருந்தாபட்டி என்னும் இடத்தில் துடைப்பம் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், வனவிலங்குகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும என்று கோரிக்கையும் அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Video:சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த சில்மிஷ இளைஞர்கள்