திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 45 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும் ஒரே கோயிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த ஆண்டு மாசிப் பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று கோயிலின் மைய மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்தனர். மேலும், பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்புத் தொட்டியில் இட்டும், தீச்சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
இதையும் படிங்க: '21 அரிவாள் மீது நடந்த பூசாரி' - ஆன்மிகமும் அறிவியலும்